திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் – பணியாளர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை: பழங்குடியினர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பார்க்க கட்டண சீட்டு பெற்றுள்ளனர் அப்போது திரையரங்கில் பழங்குடியினரை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது.

திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த மக்களை அனுமதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் அமைந்தகரை தாசில்தார் மாதவன் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் நரிக்குறவர் மக்களை படம் பார்க்க அனுமதி மறுத்த திரையரங்கு பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் சமூக வலைதள ங்களில் பெரும் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில்.

திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியது கலைத்துறை அனைவருக்கும் சொந்தம் அதை யாரும் தடை செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *