
திருவண்ணாமலை: அருணாசேலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை ஏற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து, அண்ணாமலையார் கோவில் நுழைவாயிலில் தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை காண இதுவரை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்தனர். இந்த நிலையில், கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான குறிப்பிட்ட அனுமதி சீட்டு கோவில் சார்பாக இலவசமாக வழங்கப்படும். இது மலை மீது தீபம் ஏற்றுபவர்கள், நெய் எடுத்து செல்பவர்கள், கொப்பரை கொண்டு செல்பவர்கள் போன்றோருக்கு இந்த அனுமதி சீட்டு வழக்கப்படுகிறது. இப்படி இலவசமாக வழங்கப்பட்ட அனுமதி சீட்டுகளை சிலர் பக்தர்களுக்கு ரூ.2 முதல் 4 ஆயிரம் வரை