திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் மின் வேலியில் சிக்கி பெண் பலி-விவசாயி உட்பட 3 பேர் கைது.!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள மாயாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி ஜெயந்தி(30), விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயந்தி கணவரிடம் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.நேற்று அதிகாலை விவசாய நிலத்தின் அருகே புதர் பகுதியில் ஜெயந்தி சடலமாக கிடப்பதை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.அப்போது சடலமாக கிடந்த ஜெயந்தி கையில் நெற்கதிரை பிடித்திருந்துள்ளார். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஜெயந்தி கையில் நெல் கதிர் இருந்ததால் அவர் வயல்வெளி பகுதியில் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது அருகே உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பாலகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் இரவு தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக குறுக்கு வழியில் விவசாய நிலத்தின் வழியாக ஜெயந்தி சென்றுள்ளார். அப்போது, நெல் வயலில் எலிகளை கட்டுப்படுத்த மின் வேலி அமைத்திருந்ததில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.மேலும், ஜெயந்தி மின் ஒயரில் சிக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பாலகிருஷ்ணனன் தனது மகன், மருமகளை அழைத்து வந்து பெண்ணின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று சிறிது தொலைவில் இருந்த புதர் மண்டிய பகுதியில் வீசியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து ஜெயந்தியின் கணவர் பூபாலன் மங்கலம் ேபாலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்புக்கு காரணமான

பாலகிருஷ்ணன்(75), அவரது மகன் சந்திரசேகர்(45), மருமகள் மஞ்சுளா(42) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *