திருவண்ணாமலையில் பரபரப்பு கேஸ் வெல்டிங் மூலம் ஒரே இரவில் 4 இடங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் 50 லட்சத்திற்கு மேல் பணம் கொள்ளை.!

திருவண்ணாமலை: ஒரே இரவில் 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மிஷினில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இதனிடையே இங்குள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் நேற்று இரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். மேலும் கேஸ் வெல்டிங் பயன்படுத்தியதால் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து ஏடிஎம் மையத்திற்கு வந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் மர்மநபர்கள் புகுந்து மிஷினில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.56 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரங்கள் உடைத்து லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *