திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் ஏழை எளிய மக்களை கடுமையாக வஞ்சிக்கிறது; திரும்ப பெற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கோரிக்கை.!

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி தமிழகம் முழுவதும் அபராத தொகை உயர்த்தியது அரசு இதை திரும்பப் பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ராங் கோரிக்கை வைத்துள்ளார்; தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அக்டோபர் 28 முதல் வாகன விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர் களுக்கு 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கடுமை யான அபராதங்களை விதித் துள்ளது. அரசின் வருவாயை உயர்த்துவதற்காக மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இந்தச்சட்டம் தமிழகத்தையே சொல்ல முடியாத துயருக்கு ஆளாக்கியிருக்கிறது.

வாகன ஓட்டிகள் தவறுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை ஏதும் அறியாது அந்த வாகனத்தில்பயணம் செய்யும் பயணிகளுக்கும் விதிக்கப்படுகிறது. இதனால், மக்கள் எரிச்சலும் கோபமும் அடைந்து காவல் துறையை சபித்து வருகிறார்கள். பொறியியல் படிப்பு,பட்டப்படிப்பு எனப்படித்தவர்கள் மாதம் 15,000 ரூபாயும், அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மாதம் 10,000 ரூபாயும் சம்பாதிப்பதே பெரியவிஷயம் எனப்போய்க்கொண்டிருக்கும் இன்றைய பொருளாதாரச் சூழலில் அபராதம் என்றபெயரில் அந்தப் பணத்தை அரசு பறித்துக்கொள்வது எந்தவகையில் சரியானமக்கள்நல அணுகுமுறை என்று புரியவில்லை.

விலைவாசி உயர்வால் தாங்கமுடியாத பொருளாதாரச் சுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அதிலிருந்து மீட்கும் தார்மீக கடமையுடைய அரசு, போக்குவரத்து காவலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகையை டாஸ்மாக் கடைகளுக்கு விதித்திருப்பதைப்போல் டார்கெட்டாக விதித்து வழக்கு போடதூண்டுவதும் அபராதம். என்றபெயரில் பணம் பறிப்பதும் அந்த டார்கெட்டை முடிக்காத காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதும் எந்தவகையில் மக்கள்நலச்சட்டம் என்று புரியவில்லை.

வண்டிகளை பதிவு செய்யும்போது சாலைவரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூலிக்கும் அரசு முறையான சாலை வசதியைக் கூட அமைத்துத்தராமல், அபராதம் வசூலிப்பதிலேயே மட்டும் ஆர்வம் கட்டுவது சரியல்ல. பிடிபடும் வாகன உரிமையா ளர்கள் பிடித்தவரிடமே வண்டியை விட்டுவிட்டு செல்வது போன்ற சம்பவங்களை தினந் தோறும் பார்க்கும்போது மனதுக்கு வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக அரசு இவைக்ளையெல்லாம் கவனத்தில் கொண்டு புதிய மோட்டார் வாகனச் சட்டங்களை மறுப்ரிசீலினை செய்யவேண்டும். என்றும் தமிழக அரசிற்கு பதில் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *