
பண்ருட்டி: பகுஜன் சமாஜ் கட்சியின் சமூக பொருளாதார சமத்துவத்தை உருவாக்கிட ஜெய்பீம் மாடல் விளக்கப் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று 04/04/23ல் நடைபெற்றது. இந்த கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஏற்படு செய்யப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திரு.கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் திராவிட மாடல் அரசுக்கு கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் திமுக குடும்ப அரசியல் கட்சியாக இருக்கிறது என்றும் சில நாட்களுக்கு முன்பு திராவிட மாடல் அரசு கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க போவதாகவும் அதற்கு ரூ.81 கோடியில் வைக்கபோவதாக கூறினார்கள்.
அதை நாங்கள் தடுக்கவில்லை ஆனால் அதில் என்ன பயன் அப்படி வைக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் கல்வியை இலவசமாகி விட்டு அப்பொழுது பேனாவை வைத்தால் அந்த பேனாவிற்கும் கட்சி கொள்கைக்கும் ஓர் அர்த்தம் உண்டு அப்படி திராவிட மாடல் அரசால் வைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள்.