
நடைபெற்று முடிந்து சென்னை மாநகராட்சி தேர்தலில் அம்பத்தூர் மண்டலம் 86 வது வார்டில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நாளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் 86வது வார்டில் போட்டியிட்ட முகமதுஅப்பாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்.

பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் என்ன பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பதாகவும். வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 86வது வார்டில் மட்டும் 168 ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கொரோனா நோயாளிக்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் அந்த குறிப்பிட்ட 3 வாக்குச்சாவடிகளில் மட்டும் 168 ஓட்டுகள் பதிவாகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் வாக்குப்பதிவு நடைபெற்ற மையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை பத்திரப் படுத்துமாறும்.இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பத்திர படுத்துவதாகும். மேலும் இந்த வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவு அளித்துள்ளது. மேலும் எதிர் தரப்பாக தமிழகத் தேர்தல் ஆணையம், சென்னை மாநகர தேர்தல் ஆணையர், மண்டல அலுவலர் மற்றும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கு தொடுத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் முகமதுஅப்பாஸ் அவர்கள் அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.