
ஆளுங்கட்சியான தி.மு.க-வில் தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்சிப் பதவிகளுக்கு விருப்பம் தெரிவித்த உறுப்பினர்கள் வேட்புமனுத் தாக்கலில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க கிளைக் கழகத்துக்கான உட்கட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது.இதனால், கூடலூர் நகர தி.மு.க அலுவலகத்தில் கட்சியினர் கூட்டம் அலைமோதியிருந்தது.

அப்போது திடீரென, கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது. வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பில் முடிந்திருக்கிறது வேட்புமனுத் தாக்கல். திடீரென தி.மு.க அலுவலகத்தில் இருந்து வரும் கூச்சலைக் கேட்ட மார்கெட் வணிகர்கள் அங்கு சென்று கைகலப்பைத் தடுத்திருக்கிறார்கள். வணிகர்களும், கட்சி நிர்வாகிகள் சிலரும் பஞ்சாயத்து பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.