
திண்டிவனம்: பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனத் தலைவர் தாதா சாகிப் கன்சிராம் அவர்களின் 89வது பிறந்தநாள் விழா 15/03/23 இன்று திண்டிவனம் ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி தலைவர் தீபக்குமார், தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சா.ஸ்டீபன்ராஜ், அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவரது துணைவியார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி,B.A. அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன், மாவட்ட பொருளாளர் ஆனந்த்,D.M.E. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் , மாவட்ட பொது செயலாளர் மெடையூர் துரை, திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயன், பிரதீப், சரத்குமார், மற்றும் மரக்காணம் ஒன்றிய தலைவர் ரஞ்சித்குமார், வினோத்குமார், உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் ப.சிவபெருமான் உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் ஜெ.பொன்னுரங்கம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி செயளாலர் தண்டபாணி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்