தலைவிரி கோலம் ஏன்? தமிழன்னையை அசிங்கப்படுத்திவிட்டார்.. ஏ ஆர் ரகுமான் மீது போலீசில் புகார்!

சென்னை: தமிழன்னை குறித்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன் ஹிந்தி மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்திக்கு ஆதரவாக பேசிய அவர், பள்ளி மாணவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி அடிப்படை அறிவு இருக்க வேண்டும். ஹிந்தி தேர்வுகளில் இந்தியா முழுக்க இருக்கும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார்.அது மட்டுமின்றி ஹிந்திதான் நம்முடைய அலுவல் மொழி. இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும். மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல ஆங்கிலத்திற்கு மாற்றாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித் ஷா குறிப்பிட்டார். இதையடுத்து இந்தி திணிப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்தது. மத்திய அரசு மீண்டும் இந்திய திணிக்க முயல்வதாக பல்வேறு மாநிலங்களில் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.இந்த நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழன்னையின் புகைப்படத்தை ன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வெளியிட்டு இருந்தார். தமிழன்னையை தமிழர்களின் நிறத்தில் மிகவும் அழகாக, ரௌத்திரமாக, கையில் ழகரத்தின் சூலம் ஏந்தி நிற்பது போல காளியின் தோற்றத்தில் வடிவமைத்து இருந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருந்தார். இது சந்தோஷ் நாராயணனன் என்ற கலைஞர் வரைந்த ஓவியம் ஆகும்.அதே சமயம் தமிழர்களை கருப்பாக காட்டிவிட்டார்.. தமிழன்னை கருப்பு இல்லை என்றெல்லாம் சிலர் எதிர் கருத்துக்களை தீவிரமாக வைத்து வந்தனர். இணையத்தில் சிலர் ரகுமானுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான் தமிழன்னை குறித்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக முத்து ரமேஷ் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி என்று அக்கட்சியில் இவர் நிர்வாகியாக இருக்கிறார். தமிழன்னையை ஏ. ஆர் ரகுமான் அவமதித்துவிட்டார். கருப்பாக காட்டி தமிழர்களின் மனதை புண்படுத்திவிட்டார். கொச்சையாக தமிழன்னையை காட்டி இருக்கிறார். இதனால் உடனே அவர் மீது நடவாடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *