
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறை பட்டு கிராமத்தில் அம்பேத்கர் நகர் தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 18/01/2023 அன்று அத்துமீறி நுழைந்து வீடுகள் மற்றும் பொருட்களை சூறையாடிய சாதி வெறி கும்பலை உடனடியாக கைது செய்ய கோரியும் 12 தலித் இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வாழ்க்கை ரத்து செய்ய கோரியும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் ஒன்றிய செயலாளர் சிவாஜி,பழனி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி கண்டன உரையாற்றினார்கள் இதில் மாநில மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.