சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமல். வாகன ஓட்டிகள் அச்சம்.!

தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது… அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 6,000 கி.மீ.க்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன…இந்த சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக மொத்தம் 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவைகளில் 27 சுங்கச்சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது… அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என தெரிகிறது.. மேலும் சரக்கு வாகனங்களில் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கட்டண உயர்வு பட்டியலில், திண்டிவனம் – ஆத்துார், போகலுார், பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலுார், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி,மாத்துார், நல்லுார், நாங்குனேரி, ஸ்ரீபெரும்புதுார், பள்ளிக்கொண்டா, பரனுார், பட்டரை பெரும்புதுார், புதுக்கோட்டை – வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதுார், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.இந்த சுங்கச்சாவடிகளில், 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க உள்ளது.சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள மாத்தூர், வானகரம், சூரப்பட்டு, அதையொட்டிய பரனுார், நல்லுார், ஸ்ரீபெரும்புதூர், எஸ்.வி.புரம், பட்டரை பெரும்புதூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது, வாகன உரிமையாளர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடி கொண்டிருக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், கூடுதல் செலவு ஏற்படும் என்பதால்தான், சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் 60 கி.மீ., இடைவெளிக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்ககனவே அறிவித்திருக்கிறார்.. அதன்படி, 16 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டிய பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய அவசியமும் தற்போது எழுந்துள்ளது.. அதுமட்டுமல்லாமல், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க கட்டணத்தையும் உயர்த்தி இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *