
சென்னை : மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அருகே பொதுமக்கள் நிறைந்த சாலை என்றும் பாராமல் மாணவிகள் இருதரப்பாக பிரிந்து குடுமியை பிடித்து கொண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் தங்களுக்குள் அடிக்கடி கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.முதலில் சென்னையில் தான் மாணவர்கள் மோதல் சம்பவங்களில் ஈடுபடுவது போல காட்டப்பட்டாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.மேலும் கடந்த சில நாட்களில் ஆசிரியர்களுக்கு அடங்காமல் அவர்களை மிரட்டுவது, வகுப்பறையில் நடனமாடுவது, அரசு பேருந்துகளிலும் வகுப்பறைகளிலும் மது அருந்துவது , சக மாணவர்களை ராகிங் செய்வது போன்ற சம்பவங்கள் வெளியாகி பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வருகிறது.மாணவர்கள் தான் இப்படி என்றால் மாணவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாணவிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மின்சார ரயிலில் மாணவி ஒருவர் சாகசம் செய்த வீடியோ வெளியான நிலையில், அதற்கு அடுத்ததாக அரசு பள்ளி சீருடையில் அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் மது குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த வகையில் நடு ரோடு என்றும் பார்க்காமல் ரவுடிகளை போல மாணவிகள் கட்டிப்புரண்டு குடுமிப்பிடி சண்டை போட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள். கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துகொண்டிருந்த போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே பேருந்து நிறுத்தத்திலேயே வாய்தகராறு ஏற்ப்பட்டு குடுமிப் பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.அங்கிருந்த சக கல்லூரி மாணவமாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். கல்லூரி வளாகர்தினுள் ஏற்ப்பட்ட வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமி சண்டையாக மாறியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.