
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2-இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச்செயலர் வெ.இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், எனவே ஒருசில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றத்தின் போது, அரசு செயலர்களும் மாற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.