
கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று 11/02/2023 கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் கச்சேரி சாலையில் நடந்த போராட்டத்திற்கு விவசாய சங்க வட்ட தலைவர் கொளஞ்சி, விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் மணி, பூமாலை கண்டன உரையாற்றினர். மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பை வெளியிடாதது, கடந்த ஆண்டை விட உர மானியத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி குறைவாக ஒதுக்கியது, 100 நாள் வேலை திட்ட நிதியில் கடந்த ஆண்டை விட ரூ.29,400 கோடி குறைத்தது, உணவு மானியத்தை குறைத்தது ஆகியவற்றை கண்டித்து பட்ஜெட் நகலை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வட்ட செயலாளர்கள் அருள்தாஸ், தெய்வீகன், சாந்தமூர்த்தி, நிர்வாகிகள் தங்கராசு, ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.