
நாடு முழுவதும் ஆண்டின் கடைசி நாளும் ஆண்டின் முதல் நாளும் டிசம்பர் 31 இரவு 12 மணி அளவில் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கேக் வெட்டியும் வெடி வெடித்தும் புத்தாண்டை வரவேற்பது வழக்கம் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை எனவும், டிச.31 இரவு புத்தாண்டின்போதும் கடற்கரைகளில் கூடும் பொதுமக்கள் கடலில் இறங்கி கொண்டாட அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், கைது செய்யப்படுவார்கள் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு காவல்துறையால் வழங்கப்படும் எனவும், வழிபாட்டு தலங்களில் குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆங்கில புத்தாண்டையொட்டி டிச.31-ல் தமிழகம் முழுவதும் மாலை முதல் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவோர் காவல்துறையின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பைக் ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.