
சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஏசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் வகையில், 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். நிறைவின்போது கடைசி 3 நாட்கள் குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், புனித வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பிரார்த்தனை நடப்பது வழக்கம். ஏசு சிலுவையில் அறைப்பட்ட தினத்தை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் புனித வெள்ளியாக கடைபிடிக்கின்றனர்.
அதன்படி, புனித வெள்ளியான நேற்று தமிழகத்தில் அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள், சிலுவையை சுமந்து ஆலயத்தை சென்றடைந்தனர். அதேபோன்று, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்னை நடந்தது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளனமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.