தமிழகத்தில், அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்து, 4 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன; 1 கட்சி இணைப்பு.!

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை, பா.ஜ., பகுஜன் சமாஜ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஆகிய 7 கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. தி.மு.க., – அ.தி.மு.க., – தே.மு.தி.க., ஆகியவை, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இருந்தன.

இக்கட்சிகளுக்கு மட்டுமே, தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்படும்; வாக்காளர் பட்டியல் வழங்கப்படும். மேலும் அக்கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிட முடியும்; அந்த சின்னத்தில், வேறு கட்சிகள் போட்டியிட முடியாது.

ஒவ்வொரு தேர்தலில் பெறும் ஓட்டு சதவீதம், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் எண்ணிக்கையில், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்குகிறது. அந்த வகையில், சமீபத்தில் அங்கீகாரம் பெற்ற, தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்த தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆகிய 4 கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.

இதனை தொடர்ந்து புதிதாக தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் இணைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநில அந்தஸ்து இருப்பதால், அதற்கான பட்டியலில் இடம்பெறும்.

நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., கணிசமான ஓட்டுகளை பெறாவிட்டால், தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *