
பிரதமர் மோடி எப்போது வெளிநாடு சென்றாலும், தன்னுடன் இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் கைவினைப் பொருட்களை எடுத்துச் செல்வார். தான் சந்திக்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தப் பொருட்களை பரிசாக கொடுப்பார் மோடி.இது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.

பிரதமர் ஒரு ‘லிஸ்ட்’ வைத்துள்ளார். இதில் 20 மாநிலங்கள் உள்ளன.அந்த மாநிலங்களின் சிறந்த கைவினைப் பொருட்களின் பட்டியல் பிரதமரிடம் கொடுக்கப்படும். அதிலிருந்து என்ன வேண்டும் என்பதை மோடி முடிவு செய்து சொல்வாராம். அதிகாரிகள் அந்தப் பொருட்களை வாங்கி, பிரதமருக்கு தந்து விடுவர்.சமீபத்தில் ஜப்பான் சென்ற பிரதமர், அந்நாட்டு பிரதமருக்கு ஒரு பரிசு அளித்துள்ளார்.

அது தமிழக பத்தமடை பாயில் செய்யப்பட்ட கைவினைப் பொருள். இதுவரை வெளிநாட்டு அதிபர்களுக்கு தமிழக கைவினைப் பொருட்களைத் தான் அதிகமாக வழங்கியுள்ளாராம் மோடி.தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம் மீது பிரதமர் மோடிக்கு அதீத காதல் உண்டு. அவர் எங்கு சென்றாலும் தமிழகத்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார் என்கின்றனர் அதிகாரிகள்.