
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி வாகனத்தை சிறிது தூரம் இயக்கி
அப்போது வாகனங்களில் முதலுதவி பெட்டகம் உள்ளதா? பஸ்சின் தரைத்தளம் உறுதியாக உள்ளதா? அவசர கால கதவு, தீயணைப்பு கருவி, புவியிடங்காட்டி, கண்காணிப்பு கேமரா, பிரேக், கட்டுப்பாட்டு கருவி மற்றும் கிளட்ச் ஆகியவை முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்தார். பின்னர் செய்திகளை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 326 பேருந்துகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் இயக்க நிலைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஆய்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 326 பஸ்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் 24 பஸ்களில் தீயணைப்புகருவி அழுத்த நிலை சரியில்லாத காரணத்திற்காகவும், முதலுதவி பெட்டிகளில் போதிய மருந்துபொருட்கள் இல்லாத காரணத்தால் குறைகளை நிவர்த்தி செய்து மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என அந்த பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
செயல்விளக்க பயிற்சி
போக்குவரத்துத்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் சார்பில் விபத்து காலங்களில் ஓட்டுநர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது மிகுந்த கவனத்துடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வுடன் இயக்க வேண்டும்.
ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.என்று தகவல் அளித்துள்ளார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.