
சிதம்பரத்தில் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயதப்படை காவலர் பெரியசாமி(26), துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தில்லைநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.