
சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தை தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகள் திடீரென நிறுத்தி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம் பணிமனைகளில் இருந்து மிகக்குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொது மக்கள் மிகவும் அவதி சிரமப்பட்டு வந்தனர்.
சென்னையில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிறுதங்களில் காத்திருந்தனர் தாம்பரம் பணிமனையில் இருந்து மாநகர பேருந்துகள் மிக குறைந்த அளவில் இயக்குப்படுவதாக புகார் எழுந்தது. சைதாப்பேட்டை, கே.கே.நகர்,வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் சேர்ந்த பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். பேருந்துகள் எப்போது இயங்கும் என்று உறுதியாக தெரியாத நிலையில், கையில் பணம் வைத்திருந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் செல்லத் தொடங்கினர். பேருந்துகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் டாக்சிகளில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மேலும் இன்னலுக்கு ஆளாகினர்.