
சென்னை மெரீனாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தினார்.
தனது 69வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்களுடன் மெரீனாவிற்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நேற்று தனது தன்வரலாற்று நூலான உங்களின் ஒருவன் புத்தகத்தை வெளியிட்டார். தனது பிறந்தநாள் பரிசாக புத்தகத்தை வெளியிடுவதாக முன்பு அவர் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று தனது பிறந்தநாளையொட்டி மெரீனாவிலுள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.