
செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் 2-ம் ஆண்டு பயின்று வரும் தஞ்சாவூர் மாவட்டம், திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பரவது மகள் கவிப்பிரியா (19) என்பவர் சட்டக்கல்லூரி விடுதியில் தனது அறையில் தங்கியிருந்தார்.இந்த நிலையில் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கவிப்பிரியாவை தொடர்ந்து ராகிங் செய்து வந்ததாக தெரிகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கவிப்பிரியா தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது தன்னை மாணவிகள் ராகிங் செய்கிறார்கள்.எனக்கு இங்கு படிக்க பிடிக்கவில்லை. அதனால் நான் ஊருக்கு வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு ஊருக்கு புறப்பட ஆயத்தமாகினார். ஆனால் இவர் ஊருக்கு செல்வதை அறிந்த மாணவி ஒருவர், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வு முடிந்ததும் ஊருக்கும் செல்லலாம் என சமாதானம் செய்துள்ளார்.அவரது பேச்சை கேட்ட கவிப்பிரியா மீண்டும் விடுதிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் கவிப்பிரியா இறந்தார். மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து கவி பிரியாவின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் தற்கொலை முயற்சி குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவியின் தற்கொலைக்கு ரேகிங்தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறார்கள். மேலும் ரேகிங் செய்வது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.