
பாஸ்டன்:
1912, ஏப்., 10ம் தேதி தன் முதல் பயணத்தை துவங்கியது. வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் ‘டைட்டானிக்’ கப்பலின் மிச்சங்களைக் காண ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கியில் கோடீசுவரர்கள் 5 பேர் சென்றனர். கடந்த 18-ந் தேதி ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய இந்த நீர்மூழ்கி, மாயமானது. பின்னர், அது உள்வெடிப்பை சந்தித்து விபத்துக்குள்ளானதையும், அதில் சென்ற 5 பேரும் பலியாகிவிட்டதையும் அமெரிக்க கடலோர காவல் படை உறுதி செய்தது.
இந்த நிலையில், ‘டைட்டன்’ நீர்மூழ்கி விபத்து குறித்து, அமெரிக்க கடலோர காவல் படை, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரான்ஸ் கடல் விபத்து மரண விசாரணை வாரியம் மற்றும் இங்கிலாந்து கடல் விபத்து விசாரணைப் பிரிவு ஆகியவை இணைந்து விசாரணை நடத்துகின்றன.