டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் – அரசு பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.!

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையே, டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் எதிரொலியாக டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு இன்றும், வரும் 5-ம் தேதியும் விடுமுறை அறிவித்து மாநில கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *