
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் மதுரா நார்ச்சாம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் அருள் என்ற அந்தோணி ஆரோக்கியராஜ். இவர், நேற்றைய தினம் தனது உறவினர் டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். உடன், தனது 3 வயது குழந்தையையும் டிராக்டரின் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக குழந்தை கீழே தவறி விழுந்து, டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோவேட்டரில் சிக்கி படுகாயமடைந்திருக்கிறது. உடனடியாக குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நல்லாண்பிள்ளை பெற்றால் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் கலப்பையில் சிக்கி, சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.