
சென்னை: நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். 2 ஆண்டுகளாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபட்டனர்இன்றுக்குள் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் எனவும் கூறிய அவர்கள். இது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில்:- 2012-ம் ஆண்டு ஓவியம் உடற்கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தமிழகம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மாதத்திற்கு 12 அரை நாட்கள் வேலை என்ற நிலையில் மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கி தற்போது பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்து இருந்தனர். இரண்டு ஆண்டுகளாகியும் இந்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கு கால முறை சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். என்று அவர் கூறினார்.