
சாலை விபத்தில் உயிரிழந்த குப்பை பொருட்களை சேகரிப்பவரின் சடலத்தை குப்பை லாரியிலேயே போலீஸார் ஏற்றிச் சென்ற செயல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் வாயிலாக பரவில் பலரது மத்தியில் கண்டனங்களுக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.புதன்கிழமையான (ஜூன் 1) இன்று காலை ஜோத்பூரின் பிரதாப்நகரில் உள்ள பரகதுல்லாகான் அரங்கத்துக்கு அருகே பேருந்து மோதிய விபத்தில் குப்பை சேகரிக்கும் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விவரம் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த குப்பை சேகரிப்பாளரின் உடலை ஏற்றிச் செல்ல டாக்ஸியை வர வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் டாக்சி வராததால் அங்கிருந்த குப்பை லாரியிலேயே சடலத்தை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.டி.எம். மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்திருக்கிறார்.