
கும்பகோணம்: நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 06ம் தேதி சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் பல்வேறு அரசு அலுவலகங்கள் அரசியல் கட்சியினர் சுவரொட்டி மற்றும் பதாகையில் ஓட்டியும் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வந்தனர் இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் படத்தை அவமதித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. டாக்டர்.அம்பேத்கர் படத்திற்கு காவி சட்டை அணிவித்து, விபூதி பூசி போஸ்டர் ஒட்டிய குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கும்பகோணம் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.