
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் ஆதி அதிமுகவின் பொதுச் செயலாளருமான முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் மரணம் மர்மமாகவே இருந்து வந்துள்ளது இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அமைத்து பல்வேறு தரப்பினரும் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.இந்நிலையில், இந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதில் சசிகலா உள்பட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.சசிகலாவுடன் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.