
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு ஊழியர்களுடைய பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு ஜாக்டோ ஜியோ ஆகும். அவர்கள் தலைமை செயலகத்தை வருகிற 11-ம் தேதி முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு தற்போது 3 அமைச்சர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
இதில் அரசு செயலாளர்கள் யாரும் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2-ம் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். ஓய்வூதியம், அகவிலை படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில், ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு அரசு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் 11-ல் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.