
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார்.இந்தியா-ஜப்பான் 14-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அரசு முறைப் பயணமாக அவர் இந்தியா வருகிறார். இந்த உச்சி மாநாடானது சனிக்கிழமை நடைபெறும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இருநாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்த இந்த உச்சி மாநாடு வாய்ப்பாக அமையும் எனவும் பாக்சி தெரிவித்தார்.இவ்விரு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை. கடைசி உச்சி மாநாடு கடந்த 2018-இல் டோக்கியோவில் நடைபெற்றது