சேலம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்து அறுத்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னப்பொண்ணு.இவர்களின் கடைசி மகள், அங்குள்ள தளவாய்ப்பட்டி நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார்.. 15 வயதுதான்..சம்பவத்தன்று, சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் தினேஷ்குமார் என்பவர் பாலியல் தொல்லை தந்துள்ளார். தினேஷ்குமாருக்கு 25 வயது.. கார்த்திக் என்று இன்னொரு பெயர் இவருக்கு உள்ளது..

கல்யாணமாகிவிட்டது.. மனைவி பெயர் சாரதா. இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது… தினேஷூம் சிறுமியும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இரு குடும்பத்தினரும் நட்பாகவே பழகி வந்திருக்கிறார்கள்…சிறுமி மீது ஒரு கண் பலநாளாக இருந்து வந்த நிலையில், அன்றைய தினம் வீடு புகுந்து சீரழிக்க முயன்றுள்ளார்.. ஆனால், சிறுமி அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால், பெற்ற தாய் கண் எதிரிலேயே கொடூரமான முறையில் சிறுமியின் தலையை வெட்டி படுகொலை செய்தார் தினேஷ்.. அதுவும், வன்கொடுமை செய்யும்போதும், சிறுமியின் தலையை துண்டிக்கும்போதும், சாதிபெயரை திட்டி திட்டியே ஆத்திரத்துடன் துண்டித்துள்ளார்.. தலையை அறுத்து தெருவில் வீசி எறிந்தார்.இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… சிறுமியின் தலை, மனைவியின் சாட்சி உட்பட அனைத்து ஆதாரங்களும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் தினேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்துடன், குண்டர் சட்டமும் பாய்ந்தது.. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு தகவல்கள் வெளியாகின..குறிப்பாக, ஒவ்வொருமுறை கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும்போது, தினேஷ்குமார், “என்னை கொன்று விடுங்கள்..! தூக்கில் போடுங்கள்.. சினிமா பார்த்து பெரிய தவறை செய்துவிட்டேன்” என்றுஅழுது புலம்பி ஒப்பாரி வைத்து கொண்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தினேஷுக்கு போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.தீர்ப்பை முன்னிட்டு, சிறையில் இருந்து இன்று காலை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட தினேஷ்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்… பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷ்குமாரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேனில் ஏற்றி ஜெயிலில் அடைக்க அழைத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *