சேலத்தில் பரபரப்பு சுயர்ச்சை கவுன்சிலர் மீது “திமுக-வினர் தாக்குதல்” பதற்றம் போலீஸ் பேச்சுவார்த்தை.!

சேலம் மாநகராட்சியின் 31-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் சையத் மூசா. இவர் மீது நேற்று முன் தினம் தி.மு.க நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சையத் மூசா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “சேலம் மாநகர 31-வது வார்டு கவுன்சிலருக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட என்னை அந்தப் பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நிலையில் நீண்டகாலமாக எனது வார்டுக்கு உட்பட்ட ஹபீப் தெரு, குண்டு போடும் தெரு பகுதிகளில் சாக்கடை பிரச்னை, குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக நான் கவுன்சிலராகப் பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகளிடம் தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர்.இதற்கிடையில் சாலை ஒப்பந்ததாரர் எனது வார்டில் எந்தவித அறிவிப்புமின்றி பணியாட்களுடன் சாலை போட வந்தார். அவரிடம் நான் `முதலில் சாக்கடை பிரச்னை, குடிநீர் பிரச்னையை சரி செய்யுங்க. அதுக்குப்பிறகு ரோடு போடலாம். அதேமாதிரி, ஒருதடவ போட்ட ரோடு மேலயே மறுபடியும் எதுக்கு போடுறீங்க… தேவையில்லாத செலவு எதுக்கு’னு அவங்கள சாலை போடவிடாமல் தடுத்து நிறுத்தினேன். உடனே அந்த சாலை ஒப்பந்தக்காரர், `சம்பந்தப்பட்ட அதிகாரி சொல்லிதான் ரோடு போடுறோம். நீங்க அவங்ககிட்ட பேசிக்குங்க’னு சொன்னாரு, அதுவரைக்கும் சாலை போடக் கூடாதுனு நான் சொன்னேன். இதனால அந்த ஒப்பந்தகாரர் தி.மு.க வட்டச் செயலாளர் இஸ்மாயில் என்பவரிடம் தகவல் கொடுத்து, என்மீது தாக்குதல் நடத்தினார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.இதுதொடர்பாக 31-வது வார்டு கவுன்சிலர் சையத் மூசாவிடம் பேசினோம், “என்னோட வார்டுல ரோடு போடுறவங்க என்னிடம் ஒரு வார்த்தையும் சொல்லல. ஏற்கெனவே நான் வார்டில் உள்ள பிரச்னை குறித்து பல்வேறு மனுக்களை மாநகராட்சி கமிஷனரிடம் கொடுத்திருக்கேன். அதெல்லாம் செய்யாம இப்போ ரோடு போட வந்திருக்காங்க. ரோடு போடுறவங்க சாக்கடைய எடுத்து மட்டம் பண்ணிட்டு, அதுல தார் ரோடு போட போறாங்க இதெல்லாம் அநியாயம் இல்லயா. என்ன ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச மக்கள் நாளைக்கு என்னதானே கேள்வி கேட்பாங்க. அதுமில்லாம இப்ப ரோடு போடுறவங்க அடுத்தது சாக்கடை சரிபண்ணனும், குடிநீர் குழாய் போடணும்’னு ரோட்ட தோண்டி போட்டுடு வாங்க. இதனால யாரோட பணம் வீணாகுது, அதுக்காக முதல்ல சாக்கடை, குடிநீர் பிரச்னைய சரிசெய்ய சொல்லி என்னோட வார்டு மக்களோட சாலை அமர்ந்து போராட்டம் பண்ணுனேன். அதுக்கு சில அதிகாரிகள் தூண்டுதலின் பேரில் தி.மு.க வட்டச் செயலாளர் இஸ்மாயில் அடியாட்களை வைத்து என்னை தாக்கினார்” என்றார்.போலீஸார் சையத் மூசா புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *