
கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்றார். பேரணியில் கலெக்டரின் துணைவியார் விஜிதா அன்னிமாலா ஸ்ரீதர், எஸ்.பி., செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டட வளாகத்தில் சுதந்திர தினவிழா ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா’ என்ற தலைப்பில் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி கடந்த 4-ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாடூர் சுங்கச்சாவடி வரை 14 கி.மீ., துாரம் சென்ற பேரணியில் பங்கு பெற்றவர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கள்ளக்குறிச்சி நகராட்சித் தலைவர் சுப்ராயலு, டி.ஆர்.ஓ., விஜய்பாபு, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஆர்.டி.ஓ., சரவணன், சி.இ.ஓ., விஜயலட்சுமி, டி.எஸ்.பி., ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி அரசு பள்ளி உடற்கல்வி பயிற்றுனர் பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.