
காஞ்சிபுரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் திறந்துவிடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர் மழை காரணமாக, புழல் ஏரியில் இருந்தும், பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.