
சென்னை : சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருட்கள் கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்து வருவது காவல்துறையினரை மட்டுமல்லாது பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதேபோல கொலை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொல்லை புகாரில் திமுக பிரமுகர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும், சென்னை சேத்துபேட்டை சேர்ந்த ஆறுமுகம் என்ற பைனான்சியரை கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அடுத்ததாக போதை மாத்திரை தொடர்பான தகராறில் 19 வயது இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் 40 இடங்களில் வெட்டிக் கொன்ற சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,”சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.ஆனால், காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவினை அதிமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.