
டெல்லி: சூடானில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 3,0000 இந்தியர்கள் சிக்கித் தவித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சனிக்கிழமை தொடங்கிய மோதலில் இதுவரைக்கும் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை நடந்த பீரங்கித் தாக்குதல்கள், போர் விமானத் தாக்குதல்கள் மற்றும் தெருச் சண்டை ஆகியவற்றின் விளைவாக கார்டூம் குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் தங்களது வீடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகரைச் சுற்றி மனிதாபிமான சேவைகளை வழங்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு கூறியுள்ளது. சூடானின் சுகாதார அமைப்பு சீர்குலைந்துவிடும் அபாயம் இருப்பதாக அது எச்சரித்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.