
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இது உலகம் முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், ‘இது சுயமரியாதை சார்ந்த விவகாரம்’ எனக் கூறி ஆங்கில பேராசிரியர் ஒருவர் ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.கடந்த மூன்று ஆண்டுகளாக, கர்நாடக தும்கூர் நகரில் ஜெயின் பியூ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவருபவர் சாந்தினி. ஹிஜாப்பை கழட்டிவிட்டு உள்ளே செல்லுமாறு இவர் நிர்பந்தப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், “கடந்த மூன்று வருடங்களாக ஜெயின் பியூ கல்லூரியில் பணிபுரிகிறேன். நான் இதுவரை எந்த பிரச்னையும் சந்திக்கவில்லை.ஆனால் நேற்றைய தினம், நான் கற்பிக்கும் போது ஹிஜாப் அல்லது எந்த மத அடையாளத்தையும் அணிய முடியாது என்று முதல்வர் என்னிடம் கூறினார். ஆனால் நான் கடந்த மூன்று வருடங்களாக ஹிஜாப் அணிந்து கற்பித்தேன். இந்த புதிய முடிவு எனது சுயமரியாதையை குலைக்கும் விதமாக உள்ளது.

அதனால் தான் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன்” என்றார்.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர் கே.டி. மஞ்சுநாத், “நானோ அல்லது நிர்வாகத்தில் உள்ள வேறு எவரும் ஹிஜாப்பை கழட்டும்படி அவரிடம் சொல்லவில்லை” என்றார்.இதையும் படிக்க |நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: ப.சிதம்பரம் வேண்டுகோள்கர்நாடகம் முழுவதும் ஹிஜாப் அணிய மறுப்பு தெரிவித்ததற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனால் பல்வேறு பகுதகளில் பதற்றம் நிலவிவருகிறது. கடந்தாண்டு கடைசியில், ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு சென்ற ஆறு மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாளடைவில் பல்வேறு கல்லூரிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில மாணவர்கள் காவி சால்வை அணிந்து கல்லூரிக்கு சென்றனர்.பதற்றத்தை தணிக்கும் வகையில், உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டது. மத அடையாளங்களுடன் கல்வி நிலையங்களுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.