சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சி கண்டண ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் திரளாக பங்கேற்பு.!

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் இல்லை என்றால் ஊழியர்களுக்கு முறையாக செட்டில்மென்ட் செய்து தொழிலாளர் விதிமுறைகள் பின்பற்றி சுங்கச்சாவடி பணியாளர்கள் பணி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்றும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து தொடர்ந்து 6-து நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் சுங்கச்சாவடியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில் விடுதலை சிறுத்தைகள்,பாமாக, புரட்சி பாரதம் கட்சிகள் உள்ளிட்ட 10ம் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றினார். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி பணியாளர்களை மீண்டும் அதே இடத்தில் பணியாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கோ.கலியமூர்த்தி கண்டன உரையாற்றினார் இதில் அவர் கூறியது மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்களோடு கார்ப்பரேட் முதலாளிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்கு துணை போகும் மோடி அரசை வன்மையாக கண்டித்ததுடன் இதுபோன்று மக்கள் விரோத செயல்கள் மோடி அரசு செயல்பட்டு வந்தால் மக்களை அவர்களை ஆட்சி கட்டளையிலிருந்து இறக்கி விடுவார்கள் மேலும் தமிழக அரசு ஏன் மெத்தனம் காட்டி வருகின்றது என்றும் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இல்லை என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன குரலை எழுப்பினார் இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட பொருளாளர் சிவபெருமான்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தியார்,உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னரங்கம்,திருநாவலூர் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசெல்வம் ,திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் பாலா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 200ம் மேற்பட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சுங்க சாவடி பணியாளர்களுக்கு ஆதரவாக கண்டன உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *