சீன விமானம் எம்யூ5735 விபத்து: 132 பேருடன் சீன விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.!

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர். என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மதியம் 03:07-க்கு குவாங்சோவை அடைந்திருக்க வேண்டும்.இந்த விபத்து தொடர்பாக, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ள இயலவில்லை.இந்த விபத்து தொடர்பாக, தீயணைப்பு அதிகாரி ஒருவர் ‘குளோபல்’ டைம்ஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்புப் படையினரை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆனால், அந்த பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். எனவே, தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதியை அடைய முடியவில்லை. தீயணைப்புப் படையினர் நடந்தே அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்” என தெரிவித்தார்.விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் சுமார் ஆறரை ஆண்டுகளாக இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் மொத்தமாக 162 இருக்கைகள் உள்ளன. இதில், 12 பிசினஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 150 பொருளாதார வகுப்பு இருக்கைகள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *