சீன இந்தியா எல்லைப் பிரச்னை: மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைப்பு.!

புதுடெல்லி: சீனஎல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அருணாச்சல பிரதேசஎல்லையில் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய – சீனப்படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும்இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர்இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தபோதிலும்,சீன எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை)சீனஎல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *