
சீனாவில் 132 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த விமானம் மலைப்பகுதியில் நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. குவாங்ஸி மாநிலத்தில் விபத்து ஏற்பட்டது.போயிங் 737 ரக சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் குன்மிங் நகரிலிருந்து குவாங்சோ நகருக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, வுசாவ் நகரில் விமானத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.விமானத்தில் 123 பயணிகளுகம், 9 விமானப் பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்பட்டது.சம்பவ இடத்தில் தீ மூண்டுள்ளதாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சிசிடிவி குறிப்பிட்டது. மீட்புக் குழு அங்கு விரைந்திருக்கிறது.உயிருடற்சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.