
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவராம்ஜி மகன் பிரகாஷ்சிர்வி என்பவர் கடை ஒன்றின் வாடகை எடுத்து சாமுண்டா என்ற ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார் இவர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளார் கடை விரிவாக்கத்திற்கு கடந்தாண்டு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 4,00,000/- ரூபாய்யை கடனாக பெற்றுள்ளார், மேலும் சின்னசேலம் பகுதியில் தெரிந்தவர்கள், பெண்கள், முதியோர்கள் என 22 நபர்கள் பணமாகவும், ஜவுளி மொத்த கொள்முதல் பாக்கியாகவும் சுமார் 2,74,94,210/- மதிப்புள்ள பணம் மற்றும் ஜவுளிகளை கடனாக கொடுத்ததாகவும் அதை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார்மனு அளிக்கப்பட்டது.
இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை செய்ய உத்தரவிட்டார், அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் விசாரணை செய்ததில் சின்னசேலம் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்சிர்வி என்பவர் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி பகுதியை சேர்ந்த 10 மொத்த துணிக்கடைக்கார்களிடம் 33,93,710/- ரூபாயும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியை சேர்ந்த 13 பொதுமக்களிடம் கடந்த 2020 -2022 ஆண்டில் சுமார் 2,41,00,500/- ரூபாய் ஜவுளிக்கடை விரிவாக்கத்திற்காக கடன் பெற்று கொண்டு திருப்பி தராமல் ஏமற்றி வந்துள்ளது தெரியவருகிறது. மேலும் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சந்திரா என்ற நபரிடம் சொகுசு கார் ஒன்றையும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இக்குற்ற செயலில் ஈடுபட்ட பிரகாஷ்சிர்வி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.