சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டும் மாணவன் வீடியோ வைரல்: காவல்துறை விசாரணை.!

கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீறுடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார். இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் கட்டு. கட்டு என்று கூற. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் தூவி வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோ ஆதாரத்தை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் தாலி கட்டிய விவகாரத்தில், மாணவி 12-ம் வகுப்பு படிப்பதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. தற்போது மாணவன், மாணவி இருவரையும் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *