
சிங்காரவேலரின் 163வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள அவரது சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 163வது பிறந்த நாளை முன்னிட்டு 18.02.2022 அன்று காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள அவரது சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மாலை அணிவித்தார்.கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரது பொது வாழ்க்கை குறித்துப் பேசினார்கள்.இந்நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மு.சம்பத், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர்கள் கீ.சு.குமார், எஸ்.கே.சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் லி.உதயகுமார், ஏஐடியூசி தலைவர் எஸ்.குப்பன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆ.சுப்பிரமணி, சு.பாஸ்கர், மு.வரதன், அருள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் என்று கூறினார்.