
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை – செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகேயுள்ள சேந்தநாடு குறுக்குச்சாலையில் கடந்த 01.01.2022 முதல் 20.03.2023 வரை உள்ள காலகட்டத்தில் சுமார் 31 சாலை விபத்துவழக்குகள் பதிவுசெய்யபட்டு அதில் 8 நபர்கள் இறந்துள்ளனர், எனவே இப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டும், பொதுமக்கள் பெரும்பாலானோரிடம் கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் இ.ஆ.ப அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு குறுக்குச்சாலை நாளை 22.03.2023-ந் தேதி முதல் பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடைசெய்யபட்டுள்ளது கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கமான பாதையிலேயே செல்லலாம்.
எனவே நாளை முதல் சென்னையில் இருந்து செங்குறிச்சி சுங்கச்சாவடி வழியாக உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் திருச்சி சென்னை தேசியநெஞ்சாலை வழியாக சென்று விருத்தாசலம் குறுக்குச்சாலை சாலை பாலத்தின் வழியாகவோ அல்லது சேலம் ரவுண்டானா வழியாகவோ உளுந்தூர்பேட்டை நகரபகுதிகளுக்குச் செல்லலாம். அதே போன்று சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கமான பாதையில் செல்வதற்கு எவ்வித தடையுமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த போக்குவரத்து மாற்றம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை நகர பொதுமக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் பயணிகள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் பொது மக்கள் தெரிவித்தனர்.