சாதி, மத, இன பாகுபாட்டை ஒழித்த முதல் அமெரிக்கா சியாட்டில் நகரம்; நிறைவேறியது சட்ட மசோதா‌.!

நியூயார்க்: அமெரிக்காவின் பொருளாதார தலைநகரமான நியூயார்க் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகர சபையில் இந்தியாவின் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையிலும், சாதி,இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசியம் , அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய-அமெரிக்கரும், சியாட்டில் நகர சபையின் உறுப்பினருமான க்ஷாமா சாவந்த் என்பவர், இந்த அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இது ஹோட்டல்கள், பொது போக்குவரத்து, சில்லறை நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் பணியமர்த்தல், பதவி உயர்வு மற்றும் ஊதியம் ஆகியவற்றில் சாதி அடிப்படையில் சிலர் பாகுபாடு காட்டுவதை சட்டம் தடை செய்யும். மேலும் வீட்டு வாடகை, சொத்து விற்பனை ஆகியவற்றில் நிலவும் சாதிய பாகுபாடுகளையும் இந்த சட்டம் தடை செய்யும்.இந்த சட்டம் குறித்த விவாதம் சியாட்டில் நகர சபையில் நடந்துவந்த நிலையில், அங்கு அந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாதி, மத, இன பாகுபாட்டை ஒழித்த முதல் அமெரிக்க நகரமானது சியாட்டில். இது குறித்த தகவல் வெளிவந்த நிலையில், பலரும் அந்த அமெரிக்க நகரத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *