சாகச பயணம் மேற்கொண்ட மாணவர்களைத் தேடும் வேலூர் காவல்துறை.!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் மேற்கொண்ட சாகச பயணத்தின் வீடியோ காண்போரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சில நாட்களாகவே சாலையில் இளைஞர்கள் சாகச பயணங்களை மேற்கொள்ளும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது அதைவிட அதிர்ச்சி தரும் சம்பவம் வேலூரில் நடந்துள்ளது விடியோ மூலம் தெரியவந்துள்ளது.வேலூரில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பள்ளி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் என 5 பேர் அமர்ந்து செல்லும் காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.வேலூரைஅடுத்த அப்துல்லாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் விடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் விடியோவில் பதிவாகியுள்ள வாகன எண்ணை வைத்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் மாணவர்கள் இவ்வாறு சாலையில் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *